நாட்டில் இடம்பெற்ற கொடூர விபத்து!

நானுஓயாவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் 8, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நானுஓயா, ரதல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 53 பேர் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து
விபத்தின் போது 41 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் மூன்று பெற்றோர்கள் பேருந்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

நானுஓயா மற்றும் ஹற்றன் பிரதேசங்களைச் சேர்ந்த எட்டு மற்றும் 12 வயதுடைய சிறுமிகள், 13 வயது ஆண், 26 மற்றும் 27 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.