கோபி – சுதாகர்
Youtube மூலம் பிரபலமாகி இன்று ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர்.
இவர்கள் இருவரும் இணைந்து Youtubeல் நடிக்கும் பல காட்சிகள் நெட்டிசன்களுக்கு மீம் டெம்ப்லேட் ஆகியுள்ளது.
என்னென்ன சொல்றான் பாருங்க, ஒரு வேல இருக்குமோ, அவன் கிடக்குறான் இது நல்ல இருக்கு என இவர்கள் பேசிய பல வசங்களை மீம் டெம்ப்லேட்டிற்கு உதாரணமாக கூறிக்கொண்டே போகலாம்.
புதிய படம்
இந்நிலையில், Youtube தோன்றிய இந்த இரு முகங்களும் வெள்ளித்திரைக்கு வந்துள்ளது.
ஆம், கோபி – சுதாகர் இணைந்து ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
இப்படத்தை அவர்களே தயாரிக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் இவ்விருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறர்கள்.