பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடாத்தும் துணிவு!

துணிவு
துணிவு மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம். அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த விட மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் துணிவு, இதுவரை தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் வேட்டை
இந்நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிகமாக வசூல் செய்த விஸ்வாசம், வலிமை ஆகிய இரு திரைப்படங்களின் வசூலை துணிவு முந்திவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.