பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடுகிறது பாக்கியலட்சுமி. கணவரால் கைவிடப்பட்ட பெண்மணிகள் துவண்டு போகாமல் எப்படி தங்களது வாழ்க்கையை தைரியமாக சந்திக்க வேண்டும் என தொடர் காட்டுகிறது.
இப்போது கதையில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி யாரை திருமணம் செய்யப்போகிறார் என தெரியவில்லை. அதேபோல் ரூ. 70 லட்சத்தை கொடுத்து வீட்டை எழில் மீட்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
சமூக வலைதளங்களிலும் எழிலின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
வெளியேறும் நாயகி
தற்போது என்னவென்றால் தொடரில் ராதிகா வேடத்தில் நடிக்கும் ரேஷ்மா தொடரில் இருந்து வெளியேறுவதாகவும் அவருக்கு பதிலாக இனி ராதிகாவாக, நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.