ஜமுனா மறைவு
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கும் பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. அவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நிலை கடந்த சில வருடங்களாக மோசமடைந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார்.
அவருக்கு வம்சி ஜூலுரு என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் இருக்கின்றனர். இன்று மாலையே நடிகை ஜமுனாவின் இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது.
சினிமா, அரசியல்
50களில் இருந்தே படங்களில் நடித்து வரும் அவர் தனது 16 வயதிலேயே நடிக்க தொடங்கிவிட்டார். எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கும் அவர் ஒருகட்டத்தில் அரசியலிலும் களமிறங்கி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், அதன் பின் பாஜகவுக்கு தாவினார். ஒரு முறை மக்களவை உறுப்பினராக தேர்தலில் ஜெயித்த அவர் இரண்டாம் முறை தோல்வி அடைந்தார்.
நடிகை ஜமுனாவின் மறைவுக்கு தற்போது சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.