பாரதி கண்ணம்மா
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் பாரதி கண்ணம்மா.
ஆரம்பத்தில் அழகான காதல் கதையாக தொடங்கப்பட்ட இந்த தொடர் பின்னாளில் மோசமான கதைக்களத்தை கொண்டு நகர மக்களால் கொஞ்சம் நிராகரிக்கப்பட்டது இந்த தொடர்.
இப்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக இணைய அவர்களது திருமணம் அனைவரும் இணைய சந்தோஷமாக நடக்க இருக்கிறது. இந்த தொடரின் கிளைமேக்ஸ் காட்சியில் பிக்பாஸ் புகழ் ஷிவின், சினேகன்-கன்னிகா, ஆர்.ஜே.பாலாஜி என பலர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
முடிவுக்கு வரும் தொடர்
தற்போது இந்த தொடரை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு இந்த ஒரு மாதத்தில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. சில ரசிகர்கள் இதற்குள் முடிகிறதா என்றும், சீக்கிரம் முடியுங்கள் என்றும் ஒருதரப்பினரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram