பையா 2 எடுக்க தயாராகும் லிங்குசாமி

லிங்குசாமி
தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2010 – ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா.

இப்படம் கார்த்தியின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதன் பின் லிங்கு சாமி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் இவர் இயக்கிய ‘வாரியர்’ திரைப்படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

பையா 2
சமீபத்தில் லிங்கு சாமி உலகநாயகன் கமல் கூட்டணியில் புதிய படம் வர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் லிங்கு சாமி பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா, ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.