ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் வுமன் சென்ட்ரிக் படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.
படங்களை விட இன்ஸ்டாகிராமில் ஜான்வி வெளியிடும் போட்டோக்கள் தான் அதிகம் வைரலாகிறது. அதற்கு காரணம் அவர் எல்லைமீறிய கவர்ச்சி காட்டுவது தான்.
அழகின் ரகசியம்
தற்போது ஜான்வி அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் அவருக்கு இருக்கும் ஒரு பழக்கம் பற்றி பேசி இருக்கிறார்.
காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவேன் என கூறி இருக்கிறார். அது தான் அவரது அழகின் ரகசியமாம்.