மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

வாணி ஜெயராம்
இந்தியளவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் வாணி ஜெயராம்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். மேலும் மூன்று முறை தேசிய விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.

இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

மரணம்
இந்நிலையில், 78 வயதாகும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்துள்ளார். படுக்கை அறையில் கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய மறைவிற்கு திரையுலக சேர்ந்த பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.