பிரபல நடிகையுடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் கமல் ஹாசன்

கமல் ஹாசன்
உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டடு வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்கின்றனர்.

கமல் ஹாசன் தினம்தோறும் உடற்பயிற்சி செய்வார் என்பதை நாம் அறிவோம். அதை அவரே பல மேடையில் கூறியுள்ளார்.

நடிகையுடன் கமல்
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் நடிகை அமலா பாலும் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

அப்போது கமல் ஹாசனுடன் நடிகை அமலா பால் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..