பேபி சாரா
தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாரா.
இப்படத்தை தொடர்ந்து சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கூட சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பேபி சாரா நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
கொட்டேஷன் கேங் எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பேபி சாரா புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம பேபி சாராவா இது! என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..