பிக் பாஸ் 6
விஜய் டிவியில் பிக் பாஸ் 6ம் சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் இருந்த நிலையில் இறுதியில் அஸீம் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.
இது கடும் விமர்சனத்திற்கு உள்ளது. விஜய் டிவியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ‘Boycott விஜய் டிவி’ என்றும் கூட ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் கொண்டாட்டம்
இந்நிலையில் முந்தைய சீசன்களை போலவே இந்த 6ம் சீசன் போட்டியாளர்களை மீண்டும் வர வைத்து ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ என்கிற ஷோவை விஜய் டிவி நடத்தி இருக்கிறது.
எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் நிவாஷினி மட்டும் வரவில்லையாம். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி தற்போது தகவல் இல்லை.