பாடகர் கார்த்தி
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானிடம் பணிபுரிந்துவந்த கார்த்தி பின்னர் அவரது இசையமைப்பில் பல பாடல்களைப் பாட தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடி வந்தார். 15 மொழிகளில் இதுவரை 8000 பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.
பாய்ஸ் படத்தில் அவர் பாடிய எனக்கொரு கேர்ல்பிரண்ட், கஜினியில் ஒரு மாலை, வாரணம் ஆயிரம் படத்தில் அவ என்ன போன்ற பாடல்கள் எல்லாம் அவருக்கு பெரிய ரீக் கொடுத்தது.
இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார்.
குடும்பம்
2006ம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்துகொண்ட பாடகர் கார்த்திக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்.