தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்கிய தனுஷ் பட நடிகை

தனுஷ்
இந்திய திரையுலகையும் தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார் தனுஷ். இவர் நடிப்பில் வருகிற 17ம் தேதி தமிழில் வெளிவரவிருக்கும் திரைப்படம் வாத்தி.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படமும் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகையில் முடிவு
வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் பெயருக்கு பின் இருக்கும் சாதி பெயரை குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது.. ” என் பெயருக்கு பின்னால் இனி ‘மேனன்’ என்ற சாதி பெயர் இருக்காது. அதை நீக்க சொல்லிவிட்டேன். சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை ” என கூறியுள்ளார் வாத்தி பட நடிகை சம்யுக்தா.