பாரதிகண்ணாம்மா 2 சீரியல் கதை இதுதானாம்

பாரதி கண்ணம்மா 2
விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா கடந்த வாரத்தோடு நிறைவு பெற்றது. தற்போது இதே தொடரின் இரண்டாம் சீசன் இன்று முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. ப்ரோமோவில் காட்டப்பட்டது போலவே 2ம் சீசன் கிராமத்து பின்னணியில் தான் உருவாகி இருக்கிறது.

பாரதி ஒரு பெரிய பணக்கார வீட்டின் பிள்ளை. அவரது 25ம் பிறந்தநாளை கொண்டாட ஊரில் இருக்கு மொத்த முக்கியஸ்தர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் பாரதியோ அவரது அத்தை மகன் பேச்சை கேட்டு காலையிலேயே குடிபோதையில் தான் எல்லோரையும் பார்க்க வருகிறார்.

அதை பார்த்து அவரது அம்மா கடும் அதிர்ச்சி ஆகிறார். ஏற்கனவே பாரதியின் அப்பா இறந்துவிட்ட நிலையில் பாரதியும் இப்படி இருப்பதை பார்த்து அவர் வருத்தத்தில் இருக்கிறார்.

கண்ணம்மா 2 கதை
மறுபுறம் ஹீரோயின் சென்ட்ரல் ஜெயிலில் தண்டனை காலம் முடிந்து வெளியில் வருகிறார். இவர் கண்ணம்மா இல்லை, இவரது பெயர் சித்ரா. ஜெயிலில் ஒரு பெண் கஞ்சா விற்பதை பற்றி புகார் சொன்னதால், ரிலீஸ் ஆகும் சித்ராவை கொலை செய்ய வெளியில் ஆள் வைக்கிறார் அவர்.

 

சித்ரா ஜெயிலில் இருந்து வெளியில் வந்து ஒரு பேருந்தில் செல்லும்போது அவரது அருகில் கண்ணம்மா வந்து அமர்கிறார். இருவரும் அப்போது பேசிக்கொள்கிறார்கள். கண்ணம்மா அவரது வாழ்க்கையை பற்றிய எல்லா விஷயங்களையும் சித்ராவிடம் சொல்கிறார்.

அதன் பின் ஜெயிலில் இருக்கும் வில்லி அனுப்பிய ஆட்கள் வந்து சித்ராவுக்கு பதில் கண்ணம்மாவை கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் கடும் அதிர்ச்சி ஆகிறார் சித்ரா.

அதற்குப்பிறகு சித்ரா தான் கண்ணம்மாவாக இனி மாறி எல்லோரிடமும் நடிக்க போகிறார். இப்படி தான் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் கதை இருக்கப்போகிறது.