‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா ‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர்.

இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்க உள்ளனர். மேலும், இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.