இந்தியன்
சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், சுகன்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் நடித்திருந்த கமல் சேனாதிபதி கதாபாத்திரத்தில் அசர வைத்திருப்பார்.
வசூல் வேட்டை
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில் 1996ல் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில் இந்தியளவில் ரூ. 53.7 கோடியும், வெளிநாட்டில் ரூ.2 7.76 கோடியும் வசூல் செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.