நடிகர் ஆர்யா தம்பி மற்றும் அவரது மனைவியை பார்த்துள்ளீர்களா?

ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கேப்டன். இப்படத்தின் எதிர்பார்த்த வெற்றியை ஆர்யாவிற்கு தேடி தரவில்லை.

அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ஆர்யா தம்பி சத்யா
நடிகர் ஆர்யாவிற்கு சத்யா எனும் தம்பி ஒரு இருக்கிறார். இவர் தமிழில் வெளிவந்த புத்தகம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது காதல் 2 கல்யாணம் படத்தில் நடித்து வருகிறார். ஆர்யாவின் தம்பி நடிகர் சத்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு பாவனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சத்யா மற்றும் பாவனா திருமணத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்..