தளபதி 67 படத்திற்கு லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

தளபதி 67
விஜய் ஒரு படத்தை முடித்த கையோடு எப்போதும் இன்னொரு படத்தை தொடங்கிவிடுவார். அப்படிதான் தான் வாரிசு படத்தை முடித்த கையோடு தனது 67வது பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ள இப்படத்திற்கு படக்குழு லியோ என பெயர் வைத்துள்ளனர்.

தற்போது ராஜஸ்தானில் அதிக குளிருக்கு நடுவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது, படக்குழு கொஞ்சம் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் சம்பளம்
தற்போது லோகேஷ் கனகராஜிற்கு தளபதி 67 படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் விஜய்யின் லியோ படத்திற்காக அவருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விக்ரம் படத்திற்காக லோகேஷ் ரூ. 12 கோடி வரை சம்பளம் பெற்றாராம்.