குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
ஸ்ருஷ்டி டாங்கே, காலயன், ஷெரின், விசித்திரா, இயக்குனர் கிஷோர், ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
கடந்து இரண்டு வாரங்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக சென்றாலும், இந்த வாரம் எலிமினேஷன் வாரமாக அமைந்துள்ளது.
அதன்படி இந்த எலிமினேஷன் வாரத்தில் இறுதி கட்டத்தில் ஷெரின், காலயன் மற்றும் இயக்குனர் கிஷோர் என மூவரில் ஒருவர் குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறுவார் என்று ப்ரோமோவில் காட்டப்பட்டது.
வெளியேறிய முதல் போட்டியாளர்
இந்நிலையில், இதிலிருந்து இயக்குனர் கிஷோர் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.
கிஷோர் வெளியேறியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இயக்குனர் கிஷோர் நாய் சேகர் எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.