சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். தொலைக்காட்சி ஆரம்பித்த காலம் முதல் இதில் தொடர்ந்து நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் உள்ளன.
சில கின்னஸ் சாதனை செய்த தொடர்கள் எல்லாம் உள்ளது.
கயல், சுந்தரி, வானத்தை போல, இனியா போன்ற பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் ஒளிபரப்பாகிறது, அந்த தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன.
நிறுத்தப்படும் தொடர்
தற்போது TRPயில் டாப்பில் இருக்கு சுந்தரி சீரியலுக்கு நிறைய எதிர்ப்பு வருகிறதாம். இந்த தொடரில் கதாநாயகன் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றி வருகிறார். தனது கணவர் பற்றி தெரிந்தும் குடும்பத்திற்காக எல்லாத்தையும் பொறுத்து கொண்டு உள்ளார்.
இது தவறான கண்ணோட்டத்தை சமூகத்திற்கு உண்டு செய்யும் என பலர் சீரியலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் IAS ஆகவேண்டும் என கனவு காணும் சுந்தரியின் பார்வை தற்போது பறிபோய்விட்டது.
இது பலருக்கும் நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் எதிர்ப்புகள் எழுந்து இந்த சீரியலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறதாம்.
இதனால் சீரியலை நிறுத்தலாமா அல்லது கதைக்களத்தில் மாற்றத்தை கொண்டு வரலாமா என சீரியல் குழு மற்றும் தொலைக்காட்சி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.