5 வார முடிவில் துணிவு பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

துணிவு
நடிகர் அஜித் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து பார்த்த படம் தான் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி மாஸ் வெற்றியை பெற்றது.

கடைசியாக தயாரிப்பு குழு இப்படம் ரூ. 250 கோடி வசூல் வரை எட்டியுள்ளது என்று கூறினர், அதன்பிறகு அவர்களது பக்கத்தில் இருந்து எந்த ஒரு வசூல் அறிவிப்பும் வெளியாகவில்லை.

பட வசூல்
இந்நிலையில் துணிவு கடந்த வாரமே OTT-ல் வெளிவந்தது, அப்படியிருந்தும் 177 தியேட்டரில் துணிவு வெற்றி நடைப்போட்டது.

தற்போது கிடைத்த தகவல் படி துணிவு 5 வார முடிவில் தமிழகத்தில் ரூ 138+ கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

வெளிநாடுகளில் 62+ கோடி வெளி மாநிலங்கள் 25+ கோடி முறையே உலகம் முழுவதும் இப்படம் 225+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.