சீனாவில் மணமகனுக்கு எதிராக 7 பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கோக்ஷமிட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங் தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மணடபத்தில் கோலாகமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின் போது சில இளம் பெண்கள் கையில் பேனர் ஒன்றை வைத்து கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர்.
முன்னாள் காதலிகள்
சென்னின் முன்னாள் காதலிகள் மண்டபத்திற்கு வெளியே பேனரை பிடித்துகொண்டு நின்றனர்.
“பெண்களை ஏமாற்றாதீர்கள். அவர்களிடம் நேர்மையாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் பழிவாங்க முடிவு செய்தால், உங்கள் நிலமை என்னாகும் என கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து முன்னாள் காதலிகளுடன் சென்னும் அவரது வருங்கால மனைவியும் தகராறில் ஈடுபட்டனர்.
இருப்பினும், முன்னாள் காதலிகளை பிரிந்ததற்கான காரணங்களை சென் வெளியிடவில்லை. தான் செய்ததற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து சென் கூறுகையில்,
பெண்களின் எதிர்ப்பால் தான் கோபப்படவில்லை என்றும், கடந்த காலத்தில் தான் ஒரு கெட்ட காதலனாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். நான் இளமையாக இருந்தபோது முதிர்ச்சி இல்லாமல் இருந்தேன், பல பெண்களை காயப்படுத்தினேன் உங்கள் காதலியை ஏமாற்றுவதை விட நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.