2018-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்பு திரை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ‘ஹீரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின்னர், சமீபத்தில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்தார். இதைத்தொடர்ந்து இவர் ‘சர்தார்’ இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தன் நீண்ட நாள் காதலியான ஆஷாமீரா ஐயப்பனை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் தஞ்சாவூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.