நடிகை ராஷ்மிகா
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து நேஷ்னல் கிரஷ் என்ற பெயருடன் வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கடைசியாக இவரது நடிப்பில் விஜய்யுடன் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது, தற்போது அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
காதலர் தினம்
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் அடிக்கடி இவர்கள் மாலத்தீவுகளுக்கு ரகசியமாக சென்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவர்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ராஷ்மிகா காதலர் தினத்தில் ஒருவருடன் விளையாடும் வீடியோவை வெளியிட அதற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். யார் அவர் தெரியுமா, இதோ பாருங்கள்,
View this post on Instagram