காளிதாஸ் ஜெயராம்
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். அவர் தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். மீன் குழம்பும் மண் பானையும், பாவ கதைகள், ஒரு பக்க கதை, விக்ரம் நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்து இருக்கும் அவர் அடுத்து சில படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
காளிதாஸ் சமீப காலமாக ஒரு பெண்ணுடன் சுற்றி வரும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருந்தது. ஜெயராம் குடும்பத்துடன் கூட அந்த பெண் நின்று போஸ் கொடுத்து இருந்த புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது.
காதலை அறிவித்த காளிதாஸ்
இந்நிலையில் இன்று காதலர் தினத்தில் காளிதாஸ் அவர் சிங்கிள் இல்லை என அறிவித்து இருக்கிறார்.
காதலி தாரிணி கலிங்கராயர் உடன் அவர் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார். மாடலிங் செய்து வரும் தாரிணி 2021ல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் போட்டியில் 3ம் ரன்னர் அப் ஆக வந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram