ஒன்றாக சுற்றுலா சென்று மாட்டிக் கொண்ட பிரபலங்கள்

சீரியல்கள்
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற முதல் சீசன் தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. தொடரை தயவுசெய்து முடிங்கள் என ரசிகர்கள் கெஞ்சம் வரைவில் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

ஒருவழியாக முடிய இப்போது இரண்டாவது சீசன் புதிய நடிகர்கள் நடிக்க தொடங்கியுள்ளது, ஆனால் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அருண் இரண்டாவது பாகத்திலும் நடித்திருக்கலாம் என சில ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

அதேபோல் ராஜா ராணி 2 என்ற தொடரில் ஆரம்பத்தில் அர்ச்சனாவாக நடித்தது தொகுப்பாளினி அர்ச்சனா தான். ஆனால் அவர் பாதியிலேயே தொடரை விட்டு விலகிவிட்டார்.

காதலர்கள் வீடியோ
பாரதியாக சீரியலில் நடித்து பிரபலமான அருண் பிரசாத் மற்றும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்த அர்ச்சனாவும் காதலிக்கிறார்கள் என ஏற்கெனவே செய்திகள் வந்தன, ஆனால் இதுகுறித்து அவர்கள் ஆம் என்றும் கூறவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை.

இந்த நிலையில் இருவரும் ஒரு இடத்திற்கு போட்டிங் சென்ற வீடியோவை வெவ்வேறு விதமாக எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட அப்படியும் இருவரும் ஒன்றாக சென்றிருக்கிறார்கள் என வீடியோ மூலம் கண்டுபிடித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)