ஏகே 62
விக்னேஷ் சிவன் ஏகே 62வில் இருந்து வெளியேறிய பின், மகிழ் திருமேனி தான் இப்படத்தை இயக்க போகிறார் என உறுதியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக கமிட்டானவர் அனிருத். ஆனால், விக்னேஷ் சிவன் வெளியேறிய பின் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் தான் ஏகே 62 படத்திற்கு இசையமைக்க போகிறார் என கூறப்பட்டது.
புதிய மாற்றம்
இந்நிலையில், இந்த நிலமையை தற்போது மாறியுள்ளது. ஆம், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்போவதில்லையாம். அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்கப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பில்லா, வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களில் ஒளிப்பதிவாள்ராக பணிபுரிந்த நிரவ் ஷா தான் இப்படத்திற்க்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பதம் ஆகியுள்ளாராம்.
இதை விட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஏகே 62 படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி வில்லன்களாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் இவை யாவும் எப்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று.