அச்சு அசல் நயன்தாரா போன்றே மாறிய அனிகா

அனிகா
குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் அறிமுகமாகி, இதன்பின் தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார் நடிகை அனிகா.

மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக என்ட்ரி தருகிறார். இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகிறது.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து, அதில் நெருக்கமான காட்சிகளில் அனிகா நடித்திருந்தால் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், அது படத்திற்கு தேவையான ஒன்று தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.

அச்சு அசல் நயன்தாரா போலவே
சமீபகாலாமாக நடிகை நயன்தாராவை போலவே அனிகா மாறி வருகிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார். அதற்கு ஏற்றார் போல் அனிகாவும் உடன் அணிந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போதும் வெள்ளை உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கிறாரே என்றும் கமன்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..