சுபி சுரேஷ்
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சுபி சுரேஷ். இவர் மலையாள தொலைக்காட்சியில் நடித்துள்ளார்.
மேலும் பல நிகழ்ச்சிகளையும் சுவாரஸ்யமான முறையில் தொகுத்து வழங்குவார். இந்நிலையில், ரசிகர்களின் மனதை கவர்ந்த சுபி சுரேஷ் மரணமடைந்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்
கல்லீரல் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சுபி சுரேஷ் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சுபி சுரேஷின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.