வாரிசு படத்தில் நடித்ததற்கு குஷ்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாரிசு
தளபதி விஜய்யின் திரைவாழ்க்கையில் ரூ. 300 கோடி வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் வாரிசு. வம்சி – விஜய் கூட்டணியில் உருவான இப்படம் மாபெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு நல்ல வசூலை குவித்தது.

உலகளவில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குஷ்பூ சம்பளம்
இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை குஷ்பூ. ஆனால், இவர் நடித்த எந்த காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை.

கிட்டத்தட்ட 17 நிமிடங்களுக்கும் மேல் குஷ்பூவின் காட்சி படத்திலிருந்து எடிட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடிக்க நடிகை குஷ்பூ ரூ. 40 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.