தனுஷ்
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து துறையிலும் மாஸ் காட்டி வருகிறவர் தான் தனுஷ். இவர் 2002 துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது.
இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். தற்போது வாத்தி திரைப்படம் நான்கு நாட்களில் 67 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சிறுவயது புகைப்படம்
இந்நிலையில் தனுஷின் சிறுவயது புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனுஷ் அவரின் சகோதரிகள் உடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள், தனுஷ் சிறுவயதில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்