ராஜா ராணி 2
ராஜா ராணி 2 தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று.
இதில் முதன் முதலில் ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக ரியா என்பவர் மாற்றப்பட்டார்.
ஆல்யா மானசாவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த அதே வரவேற்பு நடிகை ரியாவிற்கு கிடைப்பதற்குள் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இதுவே ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
வெளியேறிய முக்கிய நபர்
இந்நிலையில், ராஜா ராணி 2 சீரியலை இயக்கி வரும் இயக்குனர் பிரவீன் கூட சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.