நடிகை ஹரிப்பிரியா
படங்களில் பெண்களை அசிங்கப்படுத்துவது, அடக்கி வாழ நினைப்பது போன்று நிறைய காட்டுவார்கள், அதற்கெல்லாம் எதிர்ப்பு அதிகம் வர ஆரம்பிக்க இப்போது இயக்குனர் கொஞ்சம் மாறியுள்ளனர்.
ஆனால் சின்னத்திரை தொடர்களில் அந்த காலத்தில் இருந்து அதிக பிற்போக்கு கருத்துகள், ஆணாதிக்கத்தை காட்டுவது என பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறைய இருந்து வருகின்றன.
அதில் இருந்து ஒருசில தொடர்கள் மட்டும் பெண்களை உயர்த்தி காட்டுகிறார்கள், அப்படி பெண்கள் புரட்சி பேசும் ஒரு தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல்.
ஹரிபிரியாவின் வாழ்க்கை
இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தான் ஹரிபிரியா. கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த இவர் லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், கண்மணி என பல தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் 2012ம் ஆண்டு சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகனும் பெற்றார். பின் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த ஹரிபிரியா தொகுப்பாளர் அசாருடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.
பின் நான் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசுவது எனது பிறப்புரிமை, தவறு என்னுடையது இல்லை, பார்ப்பவர்களிடம் தான் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்டு வந்துள்ள ஹரிபிரியா மற்ற பெண்களுக்கும் ஒரு உதாரணம் என்றே கூறலாம்.