நானி
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் நானி. இவர் 2011 -ம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் இவர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான ‘நான் ஈ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தசரா’ திரைப்படம் அடுத்த மாதம் 30 தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சம்பளம்
நடிகர் நானி ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கிய நிலையில், தொடர் வெற்றியால் தற்போது சம்பளத்தை ரூ. 15 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.