தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். இவர் சசி குமார் நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
பிரமாண்ட திரைப்படம்
தற்போது லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் வைகை புயல் வடிவேலு, கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் பிரமாண்ட பொருட் செலவில் தயாராகி வருகிறது.
சந்திரமுகி 2 -வில் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.