ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து தமன்னா வெளியிட்ட வீடியோ

ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷராஃப், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமன்னா வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகை தமன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் மற்றும் அவருடைய படக்குழுவினர் இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..