நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு யாருடன் திருமணம் தெரியுமா?

ரகுல் ப்ரீத் சிங்
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் என்.ஜி.கே. தீரன் அதிகம் ஒன்று என ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் ஜாக்கி பக்னானியை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

திருமணம்
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் அவருடைய காதலர் ஜாக்கி பக்னானிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் முடிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதை அறிந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ‘ என்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல வதந்திகள் வெளியாகிறது. எனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக பேசுகிறார்கள். எப்போது எனக்கு திருமணம் நடந்தது என்று யாரவது சொல்ல முடியுமா?.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எனக்கு திருமணம் நடந்துவிட்டதாக தகவல் பரவி வருகின்றன. அவை யாவும் உண்மையில்லை ‘ என நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதன்முலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.