நடிகர் சிம்பு
சிம்பு என்றால் பிரச்சனை, பிரச்சனை என்றால் சிம்பு என அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் ஏதாவது அவரை சுற்றிக்கொண்டே இருக்கிறது.
அப்படி தான் கடந்த நாட்களாக சில விஷயங்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒன்று சிம்பு, இலங்கை தொழிலதிபரின் மகளை திருமணம் செய்ய போகிறார் என வதந்திகள் பரவ அதற்கு நடிகர் தரப்பில் இருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் பத்து தல படக்குழுவினருக்கு சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என பேச்சு அடிபட்டது.
சிம்பு செய்த காரியம்
நேற்று மாலை பத்து தல படத்தின் அட்டகாசமான டீஸர் வெளியாகி இருந்தது. யூடியூபிலும் டீஸர் மாஸ் வரவேற்பு பெற்றுள்ளது, கமெண்ட்டுகளும் தாறுமாறாக வந்துள்ளது.
தற்போது என்ன தகவல் என்றால் சில காரணங்களுக்காக தாய்லாந்து சென்றுள்ள சிம்பு அங்கேயே பத்து தல படத்திற்கான டப்பிங்கை முடித்து கொடுத்துள்ளாராம்.
வரும் 18ம் தேதி நடக்க இருக்கும் பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிம்பு கண்டிப்பாக வருவார் என்றும் படக்குழுவினரே தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் படம் குறித்து வந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.