திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட விஜய் டீவி பிரபலங்கள்

சீரியல் பிரபலங்கள்
வெள்ளித்திரையில் பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் எப்படியாவது கசிந்துவிடும். ஆனால் சின்னத்திரையில் ஒருசில ஜோடிகளின் காதலை ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சி விஷயமாகவே உள்ளது.

அப்படி இப்போது ஒரு சீரியல் ஜோடி இணைந்துள்ளார்கள்.

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று (மார்ச் 3) கோலாகலமாக இவர்களது திருமணம் முடிந்துள்ளது. திருமண புகைப்படங்கள் வெளியாக பிரபலங்கள் ரசிகர்கள் என வாழ்த்து கூறி வருகிறார்கள்.

நடித்த தொடர்கள்
சிப்பிக்குள் முத்து தொடரில் நடிக்கும் போது விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவிற்கு காதல் ஏற்பட நிஜத்திலும் இணைந்துவிட்டார்கள். விஷ்ணு கோகுலத்தில் சீதை தொடரில் அறிமுகமாக சம்யுக்தா நிறைமாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் பிரபலமானார்.