சிவகார்த்திகேயனின் தந்தை
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய தந்தை தாஸ் சிறைச்சாலையில் ஜெயிலராக பணியாற்றியுள்ளார் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தந்தையின் வாழ்க்கையை கதையாக வைத்து தான் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை நெல்சன் திலிப்குமார் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தில் வரும் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் சிவாகார்த்திகேயனின் தந்தையின் பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஜெயிலர்
சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலிப்குமார் இருவரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். பீஸ்ட் படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.