முந்தானை முடிச்சு
பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
முந்தானை முடிச்சு படத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல ரிமேக் செய்ய இருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் அந்த ப்ராஜெக்ட் தற்போது வரை தொடங்கியதாக தெரியவில்லை.
அந்த குழந்தை யார்?
முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் கையில் ஒரு சின்ன குழந்தை இருக்கும். அந்த குழந்தையும் கதையில் முக்கிய பங்கு வகிக்கும்.
அந்த குழந்தையாக நடித்தது யார் என கேட்டால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூத்த அண்ணி தனம் ரோலில் நடித்து வரும் சுஜிதா தான் அந்த குழந்தை.
அவர் பிறந்து 41 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். இந்த படம் மட்டுமின்றி அவர் வளர வளர மேலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.