பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் வரும் வாரம் நடக்கவிருப்பதை குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் ஈஸ்வரி கேட்டரிங் சர்விசை துவங்குகிறார் பாக்கியா. இந்த விழாவிற்கு பாக்கியா மாமியார் வரும் பொழுது, ராதிகா ‘வாங்க அத்தை’ என வரவேற்கிறார்.
கடுப்பான ஈஸ்வரி ‘நான் ஒன்னும் உன்னை பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. என்னுடைய மருமகள் கேட்டரிங் திறப்பு விழாவிற்காக வந்துருகிறேன்’ என கூறுகிறார்.
பதிலடி கொடுத்த பாக்கியா
இதன்பின் ராதிகாவை சந்திக்கும் பாக்கியா ஆங்கிலத்தில் சரளமாக பேசி மாஸ் காட்டுகிறார். ஏற்கனவே கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் பாக்கியாவிற்கு சரியாக ஆங்கிலம் பேசவராத காரணத்தினால் அவரை அவமானப்படுத்தினார் ராதிகா.
அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்கியா ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..