விஜய் பற்றிய கேள்விக்கு கோபமாக பதில் கூறிய அவரது தந்தை எஸ்ஏசி

எஸ்ஏசி
தற்போது கோலிவுட்டில் உச்ச நடிகராக இருந்து வருகிறார் விஜய். அவருக்கு ஒரு படத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் தரப்படுகிறது. அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இருப்பினும் விஜய் அவரது அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா ஷோபா இருவருடனும் பிரச்சனை காரணமாக அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது.

எஸ்ஏசியின் சதாபிஷேகத்துக்கு கூட விஜய் வராதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்த்க்கது.

கோபமான பதில்
எஸ்ஏசி கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மற்றும் அருகில் இருக்கும் பகுதிகளில் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று பூஜை நடத்தி வருகிறார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டிருக்கின்றனர். விஜய்க்கு சினிமாவில் இருக்கும் நிலை, அவர் அரசியலுக்கு வருவாரா என பல கேள்விகளை கேட்டிருக்கின்றனர்.

‘அவரை பற்றிய கேள்விகள் என்றால் அவரிடமே போய் கேளுங்க’ என கோபமாக பதில் அளித்து இருக்கிறார் எஸ்ஏசி.