ராஜா ராணி 2
விஜய் டிவியின் ராஜா ராணி 2ல் முதலில் சந்தியா ரோலில் ஆல்யா மானசா நடித்து வந்தார். அதன்பின் அவர் வெளியேறியதால் ரியா விஸ்வநாதன் நடிக்க வந்தார்.
சமீபத்தில் அவருக்கு வெளியேறி மூன்றாவதாக ஆஷா கௌடா சந்தியாவாக தற்போது நடித்து வருகிறார்.
ஜீ தமிழில் நடிக்கும் ரியா
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது ரியா ஜீ தமிழின் புது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறாராம்.
அந்த சீரியலுக்கு சண்டக்கோழி என பெயரிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ப்ரோமோ உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.