அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப் பட்சன் 80 வயதிலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் Project K படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஹிந்தி நடிகை தீபிகா படுகோனும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் Project K படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது திடீரென நடந்த விபத்தில் அமிதாப் படுகாயம் அடைந்து இருக்கிறார்.
எலும்பு முறிவு
“ஒரு ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது எனக்கு காயம் ஏற்பட்டது. விலா பகுதியில் தசை கிழிவு மற்றும் rib cartilage உடைந்து இருக்கிறது.ஹைதராபாத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பெற்று மும்பைக்கு திரும்பி இருக்கிறேன். ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.”
“ஆம், மூச்சு விடும்போதும் நகரும்போதும் வலி அதிகம் இருக்கிறது. சரியாக பல வாரங்கள் ஆகலாம். வலி குறைய மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என அமிதாப் அந்த விபத்து பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.