கைலாசாவில் குடியுரிமை பெறவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகியதோடு அது தொடர்பிலான சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளது.
கைலாசா என்ற தனிநாடு
பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் வெளிநாட்டுக்க தப்பி சென்றுவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில் கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே நித்தியானந்தா உயிருடம் இல்லை இறந்துவிட்டார் கோமா நிலையில் இருக்கின்றார் என்ற செய்தியும் இணையத்தில் பரவலாக கசிந்தது. ஆனால் பல மாதங்களின் பின்னர் தான் தியானநிலையில் இருந்ததாக நித்தி காணொளிகளை வெளியிட்டார்.
இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா வின் பொருளாதார, சமூக, மற்றும் காலாசார உரிமைகள் குழு கூட்டத்தில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். இது தொடர்பிலான புகைப்படங்கள் நித்தியானந்தாவின் சமூகவலைத்தல பக்கங்களில் வெளியிடப்பட்டன.
‘முடிவெடுக்கும் விடயங்களில் பெண்களுக்கு சம உரிமை’என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அனைத்து மகளிர் குழு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற பெண் பிரதிநிதிகள் ,
உணவு, இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை போன்றவை கைலாசாவில் இலவசமாக வழங்கப்படுகிறது. பழமையான இந்துமத பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வர விரும்பும் இந்து மத தலைவர் நித்யானந்தாவுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது. சொந்த நாட்டிலேயே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததோடு இந்த தொந்தரவை தடுத்து நிறுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஐ.நா அமைப்பில் 193 நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கைலாசா இடம் பெறவில்லை. இதில் இடம் பெற ஐ.நா பாதூப்பு கவுன்சில் மற்றும் பொது சபை அனுமதி வேண்டும்.
ஆனால் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதிக்கிறது.
பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திய நித்தியானந்தா
இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியிருந்தார். இதனிடையே, கற்பனையான நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்படி அனுமதி அளித்தது போன்ற கேள்விகள் பரவலாக எழுந்தன.
கைலாசா என்ற நாட்டை நித்தியானந்தா உருவாக்கி அவரது பிரதிநிதிகள் ஐநா சபையிலும் உரையாற்றிவிட்டதாக நித்தியின் பக்தர்கள் பெருமைபட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் , கைலாசா உள்ளிட்ட அனைத்தும் கற்பனை நித்தியானந்தாவின் பெணண் சீடர்கள் வெறும் ஒரு அமைப்பாக மட்டுமே ஐநாவில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிள்றது.
இந்நிலையில் தற்போது நித்தியானந்தா தன்னுடைய நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமையை தனது பக்தர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும் அவரது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது வரை கைலாசாவிற்கு எப்படி செல்வத என வழி தேடியவர்களுக்கு இது இனிப்பான செய்தியாக மாறியுள்ளது.