ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண்கள் ஒடுக்குமுறை, சாதி, மதம், காதல் என பல தலைப்புகளில் விவாதம் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
ஜீ தமிழ் மீது புகார்
சமீபத்தில் கரு பழனியப்பன் அவரின் சோசியல் மீடியா பக்கத்தில், “எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது..
தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட ” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது…! சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு ஜீ தமிழ் நிகழ்ச்சியை தாக்கி பேசியது இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.