நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் சிங்கிளாக இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது படம் குறித்த தகவல்கள் ஒருபக்கம் ரசிகர்களிடம் வைரலாகி வர திருமணம் பற்றிய செய்திகளும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
சிம்புவின் பத்து தல படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி யூடியூபில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. படம் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது, அப்படத்தை காணவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்.
இந்த நேரத்தில் தான் சிம்பு தனது 48வது படம் குறித்து ஒரு டுவிட் போட்டுள்ளார். முன்பு கொடுத்த ஒரு பேட்டி வீடியோவை பதிவிட்டுள்ளார், அதில் தானே அடுத்த படத்தை இயக்கும் முடிவில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் அவரது 48வது படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
பிரபலம் சொன்ன தகவல்
இந்த நிலையில் சிம்புவின் தீவிர ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி வரும் கூல் சுரேஷ் பத்து தல படத்திற்காக வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்துள்ளார்.
அப்போது பத்திரிக்கையாளரிடம் பேசும்போது, நடிகர் சிம்புவிற்கு திருமணம் என ஒன்று நடந்தால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தான் நடக்கும்.
அப்படி தான் டி. ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார் என தெரிவித்திருக்கிறார்.