வாகன விபத்தொன்றில் மீமுரே பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் உடதும்பர மடுகல்ல வீதியின் கலல்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த குழந்தை
குழந்தை பயணித்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலில் உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.